Header Ads

  • சற்று முன்

    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம்

     மதுரை: பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.



    தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் டீசல், உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தால் தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஏழைகள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    மதுரை, புதுக்கோட்டை, தூத்தூக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.மாணவர்களின் போராட்டங்களால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே கேரளாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் இயக்கபடவில்லை. கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad