Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்க கூடாது – டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி



    கோவில்பட்டியில்  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு எவ்வித முன் அறிப்பு இல்லமால் இரவோடு இரவாக அபரிதமான வகையில் பஸ் கட்டணத்தினை உயர்த்தியது தவறு என்பதனை சுட்டி காட்ட விரும்புகிறேன். மழையின்மையால் விவசாயம் பெய்து பொய், தொழிற்சாலைகள் நலிவடைந்த நிலையில் குறைந்த பட்சம் சுமார் 2கோடி மக்கள் பஸ் போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ் கட்டண உயர்வினை மாநில அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஆதிகமான செலவினங்கள், போக்குவரத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறுகின்றனர். ஆனால் இந்த நஷ்டத்திற்கும், கட்டணத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, பஸ் பாடி கட்டுவது, உதிரிபாகங்கள் வாங்குவது முதல் போக்குவரத்து துறையில் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்தினால் போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தினை தடுத்து நிறுத்த முடியும், போக்குவரத்து துறையில் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்தமால், அரசு பஸ் கட்டணம் உயர்வு என்பதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்க கூடாது நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது  திமுக, அதிமுக தான், அதற்கான விதையை போட்டுகொடுத்து, களத்தினை உருவாக்கி கொடுத்து இருப்பது திராவிடகளின் வீழ்ச்சி தான் காரணம்  திராவிடம் மற்றும் திரைத்துறை என்ற 2 மாயையகளில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு, ஏன் திராவிடகட்சிகள் மீண்டும் வர வேண்டும், ஒரு மாற்று ஏன் வரக்கூடாது என்றார். மேலும் வெளிமாநிலங்கள் உயர்கல்வி பெறும் தமிழக மாணவர்கள் தொடர்;ந்து மரணமடைந்து வருவது வருத்தக்குரிய ஒன்று, தமிழக அரசு வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் குறித்து கல்வி நிலையங்கள், உள்துறை அமைச்சகம் மூலமாக தகவல் திரட்டி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவர்களை கண்காணிக்கவும், அவர்களின் பிரச்சினைகளை தெரிவிக்கவும், 24மணிநேரமும் தலைமை செயலகத்தில் செயல்படும் அமைப்பினை உருவாக்க வேண்டும், ஆளும் கட்சியாக அதிமுக தனக்கு கிடைத்த வாய்ப்பினை தவறவிடக்கூடாது, தவற வீட்டுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. தங்கள் கட்சி பிரச்சினை குறித்து பேசமால் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மீதமுள்ள 3 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும்,ஓட்டப்பிடாரம்,கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் காற்றாலைக்கு நீர்,வழிஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்து விடுவித்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இதற்கான அரசணையை வெளியிட வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரனார் பெயரை சூட்ட வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மிகப்பெரிய பேரணி, மதுரையில் உண்ணாவிரதபோராட்டம் நடத்தியுள்ளதாகவும், மே 6ந்தேதி தென்தமிழகத்தில் உலகில் உள்ள அனைத்து தேவேந்திர குலவோளர்களை ஒருங்கிணைப்பு செய்து மிகப்பெரிய மாநாடு நடத்தவுள்ளதாகவும், வன்கொடுமை சட்டத்தினை மற்ற சமூகத்தினர் மீது பயன்படுத்தக்கூடாது என்று தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் இடம் வலியுறுத்தி வருவதாகவும், வேளாண்குடி மக்களான தேவேந்திரகுலவேளாளர் மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த காரணத்தினால் அவர்களின் வாழ்வாதரம், பொருளாதாரம் எதுவும் உயரவில்லை என்றும் எனவே தன் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad