Header Ads

  • சற்று முன்

    மதவாத சக்தி என்று ஒதுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டில் ஏற்றியவர் ஜெயலலிதா – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

    கோவில்பட்டி கிருஷ்ணகோவில் திடலில் அதிமுக சார்பில் எம்.ஜீ.ஆர்.101வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



    கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் கட்சி தொடங்கிய பலரும், அவரது கட்சிகளும் காணமால் போய் விட்டது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மற்றும் தொண்டர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஒரே இயக்கம் எம்.ஜீ.ஆர்.தொடங்கி அதிமுக தான். எம்.ஜீ.ஆர். அதிமுகவை தொடங்கிய போது, இந்த படம் 100 கூட ஓடாது, விசிலடிச்சான் குஞ்சகள் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏளனம் பேசினார். ஆனால் திண்டுக்கல் இடைத்தேர்தல் மட்டுமின்றி, தொடர்ச்சியாக வெற்றி பெற்ற 11 ஆண்டுகள், 3முறை முதல்வராகி சாதித்துக்காட்டினார் எம்.ஜீ.ஆர். மக்கள் நலத்திட்டங்களினால் மக்கள் மனதில் இடம்பெற்ற அவரின் மறைவுக்கு பின்பு ஜெயலலிதா, அவரது தந்த திட்டங்கள் மட்டுமின்றி, புதிய திட்டங்களை தந்து, அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றி சாதனை படைத்து இந்தியாவில் 3வது கட்சியாக கொண்டு வந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க., காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி வைத்து தான் போட்டியிட்டன. ஆனால் ஜெயலலிதா தனியாக நின்று, மக்களை நம்பி நின்று 37 இடங்களை பெற்று, எம்.ஜீ.ஆர் வைத்த அஇஅதிமுக பெயரை நிஜமாக்கினார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் கிடைத்த இரட்டை இலைச்சின்னம் என்றைக்கு நம்மிடம் தான் இருக்கும், 1988,2017 ஆண்டுகளில் கட்சி பிளவு பட்டு, சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் ஒருங்கிணைந்து சின்னத்தை மீட்டு எடுத்த இயக்கம் அதிமுக தான். ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்விஅடையில்லை சறுக்கல் தான், இரட்டை இலைசின்னம் கிடைத்த மிதப்பில் தான் தோல்வி, அதிமுக பட்டத்து யானை, ஒரு தோல்வி பெற்றால் தொடர்ந்து மாபெரும் வெற்றி பெறும், 98ல் பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் ஆட்சி கட்டில் ஏற்றி அழகு பார்த்தவர் ஜெயலலிதா, மதவாத சக்தி என்று இந்தியாவில் யாரும் கூட்டணி வைக்காத நிலையில், வாஜ்பாய் நல்லவர், அவர் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டணி வைத்து தமிழகத்தில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற இயக்கம் அதிமுக, 30 ஆண்டுளுக்கு மேலாக எம்.ஜீ.ஆர் தொடங்கிய அதிமுக இயக்கம் மக்கள் மத்தியல் மட்டுமல்ல, தொண்டர்களிடம் உள்ளதால் தமிழ் மண்ணில் என்றைக்கும் அதிமுக ஆட்சி தான் என்றார். கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமைக் கழக பேச்சாளர் ஏங்கல்ஸ், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், முன்னர்ள நகர்மன்ற துணைதலைவர் ரத்தினவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கணேசபாண்டியன், ஊராட்சி கழக செயலாளர் ரமேஸ், ஒன்றிய எம்.ஜீ.ஆர்.மன்ற இளைஞர் அணி செயலாளர் லெட்சுமணபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், ஜெமினி(எ) அருணாச்சலாமி, அலங்காரபாண்டியன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad