Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காங் .,கட்சி கூட்டத்தில் தீர்மானம்



    எட்டயபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன தீர்மானம் இயற்றப்பட்டது.

    எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள  தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த  காங்.,கட்சி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு  மாவட்ட காங்.,தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜூலு, வ.மாவட்ட காங்., துணை தலைவர்  குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து வரவேற்று பேசினார். 


    கூட்டத்தில் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்த்து வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் கட்சி சின்னமான கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்தும் மாவட்ட தலைவர் சீனிவாசன் பேசினார். 

    தொடர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார்,  வக்கீல் மகேஷ்குமார், சவரியானந்தம், உமாசங்கர், கலை இலக்கிய பிரிவு தலைவர் பெத்துராஜ், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஆறுமுகம், லட்சுமணன், தேவசகாயம், கோவில்பட்டி நகர காங்.,கட்சி தலைவர்  சண்முகராஜ் ஆகியோர் பேசினார்கள்.

    செயல் வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  தலைவராக ராகுல்காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் ஆகியோர் தேர்வு பெற்றமைக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் தமிழக அரசு  அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்விற்கு கடும் கண்டனம் தெரிவித்ததும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுந்தராஜ்நாயக்கர், வக்கீல் அய்யலுசாமி, ஜெகதீசன், புஷ்பராஜ்  செஞ்சிரெட்டி, கருப்பசாமி முத்துகிருஷ்ணன்,பால்சாமி, மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அய்யம்மாள்,  நித்யா,  எட்டயபுரம் அழகு சுந்தர்ராஜ்,  காளியப்பன் உட்பட ஏராளமான காங்க., கட்சியினர் கலந்து கொண்ட கூட்டமுடிவில் மாவட்ட காங்.,கட்சியின்  துணை தலைவர் திருப்பதி ராஜா நன்றி கூறினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad