கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் கோவில் கருவறையில் சென்று அம்மன் நகையை திருடிய பெண் கைது

அப்பெண் கழுகுமலை முத்தையாமால் தெருவைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவவரது மனைவி சண்முகசுந்தரி (35) என்பதும், தற்போது நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள செட்டிகுளத்தில் வசித்து வருவதும், விசாரணையில் தெரிய வந்தது மேலும் அப்பெண் மீது குருவிகுளம், கழுகுமலை,இருக்கன்குடி ஆகிய காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இக்கோவில் இந்துஅறநிலைய துறையின் கீழ் இருந்தும்; முறையான் பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் பொதுமக்கள் சாட்டுகின்றனர், மேலும் கோவிலுக்கு வரும்; திருடர்களை கண்டறிய போதிய கண்காணிப்பு கேமிராகூட இல்லாமலும், போதிய பாதுகாவலர்கள் இல்லாமலும் அலட்சிய போக்கில் இந்து அறநிலையதுறை செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒரு பெண் தனியாக ஒரு புகழ்பெற்ற பெரிய கோவில் கருவறை வரை சென்று அம்மனின் நகைகளை திருடிய சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை