Header Ads

  • சற்று முன்

    மாநில உரிமைகளை பறித்து, சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

    மாநில உரிமைகளை பறித்து, சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்வி சீர்த்திருத்தம் என்ற பெயரில், மாநில உரிமைகளை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நிபுணர் குழு, நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளை உள்நோக்கத்துடன் நிராகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலாளர் தலைமையில் புதிதாக ஒரு கமிட்டியை அமைத்து, அதன் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு செயல்வடிவம் கொடுக்க அவசரம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கவே, இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதாக அமைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் போராட்டத்தை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில், அதிகார மனப்பான்மையுடன் இடம்பெற்றுள்ள கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
    ஓட்டுநர் உரிமம் பெறுவதில் நியாயமான நிபந்தனைகளை மட்டும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில், மாற்றம் கொண்டுவரவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், மோட்டார் வாகனத் தொழிலை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad