Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி முன்பு தர்ணா போராட்டம் !!!



    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது இராஜா மேல்நிலைப் பள்ளி நீண்ட வரலாறு கொண்ட பாரம்பரியமான அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாகும்.  எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் உட்பட பல தரப்பட்ட மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் வகையில் இப்பள்ளி உருவாக்கப்பட்டது.  இந்த பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்பட பல அறிஞர்கள் கல்வி பயின்றுள்ளனர்.



    நூற்றாண்டு கடந்த, சிறப்பு வாய்ந்த இப்பள்ளியில் ஆசிரியர்  வேலை தருவதாக கூறி 13லட்ச ரூபாய் மோசடி ‍செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ராமசாமி. காவல்துறையில் இருந்து ஒய்வு பெற்றவர். இவரது மகள் ஹரிணிகாஸ்ரீ, தமிழ் முதுநிலை பட்டதாரியான இவர் எட்டயபுரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலை பள்ளியில் கடந்த 2009ம் ஆண்டு தற்காலிக ஆசிரியர் பணிக்கு சேர்ந்துள்ளார். மேலும் அப்பள்ளியில் நிரத்தர ஆசிரியர்; பணிக்காக அந்த பள்ளியில் செயலாளர் ராம்குமார்ராஜாவிடன் சுமார் 13 லட்ச ரூபாய் கொடுத்தாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் காலியான தமிழ் முதுநிலை பட்டதாரி பணிக்கு ஹரிணிகாஸ்ரீயை நியமனம் செய்யமால் கவிதா என்ற வேறு ஒருவரை பணிநியமனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தீக்குளிக்க முயன்ற போது அவரை அங்குள்ள தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதில், பணிவழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பணி வழங்கமால் இருந்து வந்த காரணத்தினால் ஹரிணிகாஸ்ரீ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஹரிணிகாஸ்ரீக்கு பதிலாக நியமிக்கப்பட்ட கவிதா பணிநியமன ஆணையை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கம் போது தனக்கு பணியும் வழங்கமால், பணத்தினை திருப்பியும் தரமால் ஏமாற்றிய பள்ளி செயலாளர் ராம்குமார்ராஜா மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவருடன் போலீசார் மற்றும் தாலூகா அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நாளை எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் முறையான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்ததை தொடர்ந்து ஹரிணிகாஸ்ரீ தனது போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில்  மகாகவி பாரதியார் படித்த எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad