• சற்று முன்

    கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளை



    கோவில்பட்டி அருகேயுள்ள ஓணமாக்குளத்தினை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாலமுருகன். தற்போது இவர் கோவில்பட்டி டால்துரைபங்களா தெருவில் வசித்து வருகிறார். பாலமுருகன் மந்திதோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்றிரவு வழக்கம் போல பணியினை முடித்து விட்டு, டாஸ்மாக் விற்பனை 53 ஆயிரத்து 690 ரூபாயை ஒரு பேக்கில் எடுத்து கொண்டு தனது டூவிலரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பாலமுருகன் வந்து கொண்டு இருக்கும் போது, 2 மர்ம நபர்கள், அவரது டூவிலரை மறித்து, பாலமுருகனை உருட்டுகட்டையால் தாக்கியது, மட்டுமின்றி, பணம் வைத்திருந்த பேக்கினையும் பறித்து தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த பாலமுருகன், தனது செல்போன் மூலம் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து காயமடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad