• சற்று முன்

    கோவில்பட்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம்



    தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்து பொதுமக்களுக்கும்,பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜான்சன் தேவசகாயம்,ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



    அனைவரும் வாக்காளிக்க வேண்டும், வாக்காளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ், தேர்தல் பிரிவு கணிணிபிரிவு ஆப்ரேட்டர் சுடலைமுத்து, காவல் உதவிஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆக்டிவ் மைன்ட்;ஸ் முதியோர் இல்லகாப்பாளர் ராமலட்சுமி, பானுமதி, அறக்கட்டளை பொறுப்பாளர்கள்சேர்மராஜன்,  ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad