Header Ads

  • சற்று முன்

    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கீழஈரால் தொன் போஸ்கோ கலை கல்லூரி மாணவ, மாணவியர்கள்


    தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து  பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில் எட்டயபுரத்தை அடுத்துள்ள கீழஈரால்  கிராமத்தில் அமைந்துள்ள தொன் போஸ்கோ  கலை கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்லூரி வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தின் உள்பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    இது சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் கூறியதாவது , " ஏழை எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரசு   பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இது கிராமப்புறத்திலிருந்து பள்ளி கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை உருவாக்கியுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் போராட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல்  அமைதியான முறையில் தமிழகமெங்கும் முன்னெடுத்து செல்லப்படும் " என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad