AATFUJ- ன் சார்பில் 69 வது குடியரசு தின நிகழ்வு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது .
சென்னை கொடுங்கையூர் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் 69வது குடியரசு தின நிகழ்ச்சி தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
AATFUJ - ன் மாநில தலைவர் இளசை கணேசன் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார் . நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் ஆ.வீ.கன்னையா, மாநில துணைத் தலைவர் இராமலிங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தியாகி வரதராஜலு அவருடைய மகன் வி.கே. கே. குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மூவர்ண கொடியின் சிறப்பு பற்றியும் குடியரசு, சுதந்திர போராட்டத்தில் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பை பற்றியும், குடியரசு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதில் தலித் ஒருவரும், பிராமணர்கள் நான்கு பேரும், இதர சாதியினர் இருவரும் இடம் பெற்றிருப்பதை பற்றி விளக்கமாக இளசை கனேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நிகழ்சியின் முடிவில் மூத்த பத்திரிகையாளரும், பன்முக சிந்தினையாளருமான அரசியில் விமர்ச்சகரும்மான ஞானி மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை