எட்டயபுரத்தில் தேசிய வாக்காளர் தினம் : வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எட்டயபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணயில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வாக்காளர் தின மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலையில் எட்டயபுரம் வட்டாட்சியர் சூர்யகலா துவக்கி வைத்தார்.
பாரதி மணிமண்டபத்திலிருந்து துவங்கிய மனித சங்கிலி ஊர்வலத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எட்டயபுரம் வட்டாட்சியர் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் நடுவிற்பட்டி பஜார் பகுதிகளில் வாக்களிப்பின் மகத்துவம் குறித்தும், 18 வயது நிரம்பியவர்கள் தங்களை புதிய வாக்காளராக சேர்ப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
வாக்காளர் தின கொண்டாட்டத்தில் எட்டயபுரம் ஆர்.ஐ. பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கவிதா, கிராம உதவியாளர் மாரியப்பன் உட்பட வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை