பிரதமர் மோடியை சந்திக்க நிதியமைச்சர் பன்னிர்செல்வதிற்கு கெட்டவுட் ......
சென்னை: நிதித் துறை கூட்டம் தொடர்பாக, நிதித்துறையை வைத்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டில்லிக்கு சென்றார். அப்போது, அவர், பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார். வழக்கமாக, பன்னீர்செல்வம், மோடியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டால், கொடுக்கப்பட்டு விடும். இந்த முறை, அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு மீதும், பா.ஜ., தலைமையும், பிரதமர் மோடியும் கோபத்தில் இருப்பதே, இதற்கு காரணம் என, டில்லி பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.
காரணம் என்ன:
இது குறித்து, டில்லி பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் ஜெயலலிதா இறந்ததும், மத்திய பா.ஜ., அரசு வழிகாட்டலின் கீழ், ஒரு அரசு அமைந்து, அது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி எதிர்பார்த்தார். அதற்கேற்ப, அ.தி.மு.க., தலைமையில் குழப்பமான சூழல் ஏற்பட, பா.ஜ., தலைவர்களும்; மத்திய அமைச்சர்களும் மறைமுகமாக, அ.தி.மு.க., செயல்பாடுகளில் தலையிட்டனர்.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, தமிழக அரசு ஊழலில் ஊறித் திளைக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசின் செயல்பாடுகள் மீதும், மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. அதையடுத்தே, முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க துவங்கி உள்ளார்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
கருத்துகள் இல்லை