Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் மணல் கடத்திய 3 வாலிபர்கள் கைது



    எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் வைப்பாறு மற்றும் திருச்சியிலிருந்து அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி கடத்தி வந்த  3 வாலிபர்களை எட்டயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய ஜேசிபி மற்றும் 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.



    எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் வைப்பாற்று கரையோரத்தில் அனுமதியின்றி முறைகேடாக ஆற்று மணல் கடத்தப்படுவதாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்படை காவலர் ஜெய்சங்கர் மற்றும் எட்டயபுரம் போலீசார் முத்துலாபுரம்   பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்துலாபுரம் வைப்பாறு படுகையில்திருட்டுத்தனமாக  ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்று மணல் லாரியில் அள்ளுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து மணல் அள்ளி கொண்டிருந்த  ஜேசிபி டிரைவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் ஜேசிபி டிரைவர் பெயர் பாலமுருகன்(32) என்றும் இவர்  ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள குலசேகரநத்தம்  பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் மணல் அல்ல பயன்படுத்திய ஜெசிபி மற்றும் லாரியை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசை கண்டு தப்பியோடிய லாரி டிரைவர் கடுவெட்டியை சேர்ந்த சித்திரைவேல்(28) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    தொடர்ந்து நேற்று காலை எட்டயபுரம் போலீசார் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வேகமாக வந்த இரு லாரிகளை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த இரு லாரிகளிலும் அரசு அனுமதியின்றி முறைகேடாக திருச்சியிலிருந்து  மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக லாரி டிரைவர்கள் கரூர் பாறைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25) மற்றும் திருச்சி புதூர் சுக்கான்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் (30) ஆகியோரை கைது செய்து அவர்கள் ஓட்டி வந்த இரு லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad