• சற்று முன்

    திமுக முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் காலமானார்.


    தமிழக முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் உடல்நல குறைவால் காலமானார்
    கடலூர்: மாஜி திமுக அமைச்சரும், ராஜ்யசபா எம்பியாக இருந்தவருமான என்.ராஜாங்கம் காலமானார்.கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.ராஜாங்கம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1974-76ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ராஜாங்கம். பின்னர் என்.ராஜாங்கம் அவர்கள் அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad