Header Ads

  • சற்று முன்

    திமுக கூட்டணியில் குழப்பம் ........



    பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தனியாக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளத்தால், கூட்டணியில் குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.
    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக காங்.கம்யூ. வி.சி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கின. ஆனால் திமுக டிபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வியை தழுவியது. இதனால் அதிச்சி அடைந்த கூட்டணி கட்சிகள் திமுக அணியில் நீடிக்குமா என அரசியல் ஆர்வலர்கள் பார்வை திமுக மீது திரும்பியது .
    இச் சூழலில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தி.மு.க., 27ல், ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதற்கு, கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்., - ம.தி.மு.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், ஆதரவு அளித்துள்ளன.ஆனால், '24ல், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, வி.சி., கட்சியும், '22ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, மார்க்சிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன.
    இரு கட்சிகளும், தி.மு.க.,வுடன் கைகோர்க்காமல், தனித்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால், கூட்டணியை விட்டு வெளியேறி விட்டதா? என, அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad