Header Ads

  • சற்று முன்

    அரசிலுக்கு வந்தால் காதல் மன்னனுக்கு 30.3% தலைக்கு 20.9% சூப்பர்ஸ்டாருக்கு 19.4% பேர் ஆதரவு - நியூஸ் 7 சர்வே


    சென்னை: ரஜினி, கமல், விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் மக்கள் ஆதரவு கமல்ஹாசனுக்கே அதிகம் உள்ளது. நியூஸ் 7 டிவி, குமுதம் இதழ் இணைந்து நடத்திய மக்கள் மனசுல யாரு என்ற கருத்துக்கணிப்பில் ரஜினிக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. கமலுக்கு 30.3% மக்கள் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் ரஜினிக்கு 19.4% மக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். விஜய்க்கு 20.9% பேர் ஆதரவு உள்ளது. யாருக்கும் ஆதரவு இல்லை என 29.4%பேர் கருத்து கூறியுள்ளனர். ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மக்கள் மனசுல யாரு என்ற மாமெரும் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.




    ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் ரஜினி, கமல், விஜய்யில் யார் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என கேட்கப்பட்டது. இதில் கமல் கட்சி தொடங்க மாட்டார் என 8 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என 40.9% பேரும் விஜய் தொடங்க மாட்டார் என 36% பேரும் கூறியுள்ளனர். மூன்று பேருமே அரசியலுக்கு வரமாட்டார்கள் என 15.1% பேர் கூறியுள்ளனர்.



    வாக்குவங்கியாக மாற்றும் சக்தி ரசிகர்கள் பலத்தை வாக்குவங்கியாக மாற்றும் சக்தி உள்ளவர்கள் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்: கமல் -25% ரஜினி 29.8% விஜய் - 21.7% மூவருமில்லை - 23.5% 




    கமல் நம்பர் 1 மூவரில் கட்சி தொடங்கினால் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்: கமல் - 30.3% ரஜினி 19.4% விஜய் - 20.9% மூவருக்கும் இல்லை - 29.4%



    நடிகர்கள் மீது நம்பிக்கை ரஜினி, கமல் விஜய் ஆகிய மூவரும் மக்களுக்காக உழைப்பவர்களா? எதை வைத்து நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு நம்பவேயில்லை என்று 28.1% கருத்து கூறியுள்ளனர். நடித்த கதாபாத்திரத்தை வைத்து நம்புவதாக 12.1% கருத்து கூறியுள்ளனர். மக்கள் பணிகளால் நம்புவதாக 20.5% பேரும், ஒரு மாற்றத்திற்காக ஆதரிப்பதாக 39.3% பேரும் கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad