கன்னியாகுமரி: ஓகி புயலால் வீசிய பலத்த காற்றில் நடுக் கடலில் படகுகள் கவிழ்ந்து 4 கன்னியாகுமரி மாவட்ட பலியாகி உள்ளனர். மேலும் 17 பேரின் கதி என்ன என தெரியவில்லை என கூறப்படுகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென் ஓகி புயலானது. விஸ்வரூபமெடுத்த ஓகி புயலானது கன்னியாகுமரி மாவட்டத்தை நிலைகுலையச் செய்துள்ளது. ஓகி புயலால் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது.
படகுகள் கவிழ்ந்தன
இதனிடையே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் ஓகி புயல் தாக்கியுள்ளது. பயங்கரமாக வீசிய காற்றால் படகுகள் பல நடுக்கடலில் கவிழ்ந்தன.
பலியானோர் விவரம்

விரைந்து மீட்க கோரிக்கை
மேலும் கொல்லத்தில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ஆண்டனி (வயது 40), கெஜின் (வயது 30), கெப்சன் (வயது19) உட்பட 17 மீனவர்களைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை