உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில் காலியாக இருந்த 21 நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், தேர்வுக் குழுவான கொலீஜியம் கடந்த ஆண்டு 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்தது. அதில் 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை ஏற்கப்பட்டதை அடுத்து, மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய எஸ். ராமதிலகம், ஆர். தரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன் ஹேமலதா ஆகிய ஆறு பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் 6 பேருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிபுதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்தி வரவேற்று பேசினார். பல்வேறு சங்கள் சார்பிலும் புதிய நீதிபதிகளை வாழ்த்தி பேசினார். அவர்களுக்கு புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்தனர். புதிதாக 6 நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன., உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கருத்துகள் இல்லை