Header Ads

  • சற்று முன்

    நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா!

    நடிகர் பொன்.வண்ணன் நடிகர் சங்கத்தில் இருந்து தமது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட போது அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என கொள்கை வகுத்துக் கொண்டதாக அவர் தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டார்.அரசியலற்ற தலைமையின் கீழ் நடிகர் சங்கம் செயல்படுவதாக அனைவரும் பாராட்டி வந்த நிலையில் செயலாளர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் விண்ணப்பித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், துணைத் தலைவராக தாம் பொறுப்பில் தொடர்ந்தால் தனது தனித்தன்மை இழப்பதாகவும், முரண்பாடான மனநிலையில் செயல்பட வேண்டி வரும் என்பதாலும், டிசம்பர் 4-ம் தேதியிலிருந்து தமது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகராஜினாமா கடிதத்தில் பொன்.வண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் விஷாலுடனான நட்பு தொடரும் என்றும், பொன் வண்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad