• சற்று முன்

    குற்றால மெயின் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு.. மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் பீதி



    நெல்லை: குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் குற்றால அருவிகளில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மலைகள் பாறைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி பல அடி தூரத்துக்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad