இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்கள்
ஆர்.கே.நகர் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தண்டையார்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மதுசூதனன் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார்.
அதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷும் இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனும் இன்று மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை