வேட்புமனு தாக்கல் கையோடு கட்சி கொடியை அறிமுகபடுத்தினார்.
சென்னை: அண்ணா உருவம் இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களுடன் கூடிய கொடியுடன் டிடிவி தினகரன் இன்று மனுத்தாக்கல் செய்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தினகரன் மனுத்தாக்கல்
இவர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனும் இன்று மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலை முன்னிட்டு டிடிவி தினகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதிமுக கொடியில்.. அவரது ஆதரவாளர்களும் இந்தக்கொடியை கைகளில் வைத்திருந்தனர். அதிமுக கொடியில் அண்ணா உருவம் மற்றும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருக்கும்.
கருத்துகள் இல்லை