சர்வதேச அளவிலான குத்துச் சண்டையில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ஹரியானா மாநில அரசு பசுவைப் பரிசளிப்பதாக அறிவிப்பு
சர்வதேச அளவிலான குத்துச் சண்டை போட்டிகளில் வென்று நாட்டுக்கு 5 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த வீராங்கனைகளுக்கு ஹரியானா மாநில அரசு பசுவைப் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
அன்குஷிடா போரோ (Ankushita Boro) என்ற பெயரில் குவஹாத்தியில் உலகளவில் இளைஞர்களுக்கான குத்துச் சண்டை சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 64 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்ளை வென்றனர்.
வேறு பிரிவுகளில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்ற இரு பெண்கள் வெண்கலம் வென்றனர். இவர்களுக்கு ரோத்தக்கில் ஹரியானா மாநில அரசு நடத்திய பாராட்டு விழாவில் உரையாற்றிய அம்மாநில வேளாண்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கர் (Om Prakash Dhankar), 5 தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்ற 7 பேருக்கும் ஆளுக்கு ஒரு பசுவைப் பரிசளிப்பதாகக் கூறினார்.
கருத்துகள் இல்லை