Header Ads

  • சற்று முன்

    நாளை நடைபெறவுள்ள போராட்டம் கைவிடப்பட்டது !


    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான், காரணூர், ஏமப்பேர், சடையம்பட்டு இந்தி லி.கருணாபுரம், மேலூர் ஆகிய கிராமங்களில் அடையாளம் கணப்பட்ட சுமார் 300 ,க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி (AD) கண்டிசன் DC நிலங்களை மீட்டு தருமாறு வருகின்ற  4-12-2017. அன்று. டாக்டர் அம்பேத்கர் பேரவை, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு, தமிழக நில உரிமை கூட்டமைப்பு, தமிழகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்று கூடி டாக்டர் அம்பேத்கர்பேரவையின் தலைவர் நிக்கோலஸ் தலைமையில் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.



    முன்கூட்டியே கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் இரா.சுப்புராயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு காவல் ஆய்வாளர் விஜயகுமார். உதவி ஆய்வாளர் நரசிம்மன் துணை வட்டாட்சியர் கோவர்த்தனன். ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கலந்தாய்வு கூட்டம் நடத்தினர் .
    கூட்டத்தில் எடுக்க பட்ட முடிவுகள்: தொடர் மழையின் காரணமாக ஒரு மாதம் கழித்து வருவாய் துறை அதிகாரிகளால் பஞ்சாமி நிலங்களை ஒவ்வொறு கிராமமாக சென்று இடங்களை ஆய்வு செய்து அதன் பின்னர் நடவடிக்கை எடுத்து உரியவர்கள் இடம் பஞ்சமி நிலங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 



    கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர்  இரா.சுப்புராயன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டதால்  4 - 12-2017 நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டது. கூட்டத்திற்கு 2 வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள். அம்பேத்கர் பேரவை கள்ளக்குறிச்சி ஒருங்கிணைப்பாளர் பிரமிளா கீதா மேரி,, டாக்டர் அம்பேத்கர் பேரவை விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ்' சின்னசேலம்அம்பேத்கர் பேரவை ஒருங்கிணைப்பாளர் மேரி பிரஸ் கிலார் . பலர் கலந் கொண்டார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad