Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளம் அருகே மணல் எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு....... மணல் அள்ளும் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றின் கரையோர கிராமம் சித்தவநாயக்கன்பட்டி. மணல் வளமாக இருந்தது .



     இந்த கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வைப்பாறிலிருந்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த கிராமத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள தனிநபர் நிலத்தில் சவுடு மண் எடுப்பதாகவும், பண்ணைக்குட்டை அமைக்கப்படுவதாக கூறி திருட்டுத்தனமாக மணல் அள்ள முயற்சி செய்வதாகவும், மணல் திருடும் கும்பலுக்கு, அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். 



     தங்கள் பகுதியில் மணல் எடுத்தால் குடிநீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விவசாயமும் அழிந்து விடும், எனவே மணல் அள்ளும் முயற்சிகளை கைவிட கோரி அக்கிராம மக்கள் தொடர்ந்து பல போராட்டங்கள்  நடத்தி வருகின்றனர். கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தவநாயக்கன்பட்டியில் அக்கிராம  மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து தங்களது போராட்டத்தினை கைவிட்டனர். இந்நிலையில் மீண்டும் தனியார் நிலத்தில் மணல் எடுக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரத்தினையும், மணல் அள்ள வந்த லாரியையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணல் அள்ளப்பட்டு இடத்தில் படுத்துகொண்டு மணல் அள்ளவிடமால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad