Header Ads

  • சற்று முன்

    ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து? சட்டம் ஒழுங்கை காட்டி ஆட்சி டிஸ்மிஸ்? எஸ்.வி. சேகரால் பரபரப்பு!!


    சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலை மீண்டும் ரத்து செய்து சட்டம் ஒழுங்கு மோசம் என கூறி தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கிற பொருளில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது முன்கூட்டியே "கணித்து" "ஆரூடம்" சொல்லக் கூடியதில் "வல்லவர்களா" திகழ்கிறவர்கள் தமிழக பாஜகவினர். அதுவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசியத் தலைவர் எச்.ராஜா ஆகியோர் தேர்தல் ஆணையம் இப்படித்தான் முடிவு எடுக்கும் என சொல்வார்கள்.. அவர்களின் "அருள்வாக்கு" அப்படியே பலித்துவிடும். அரசியல் அரங்கத்திலும் தேர்தல் ஆணையத்தை ஆட்டுவிக்கிறது பாஜக என்கிற விமர்சனங்கள் உச்ச ஸ்தாயில் எதிரொலிக்கும். 



    ஆர்கே நகர் பதிவுகள் 


    இப்போது இந்த வரிசையில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகரும் இணைந்திருக்கிறார். ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் தொடர்பாக தொடர்ந்து பல கருத்துகளை எஸ்.வி.சேகர் பதிவிட்டு வருகிறார்.

    சட்டம் ஒழுங்கு மோசம் 


    இதில் நேற்று எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தது என்பது பற்ற வைத்த கதையாகிவிட்டது. அதில், "விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு...." என்று மட்டும் குறிப்பிட்டு ஒரு சங்கு படத்தைப் போட்டிருக்கிறார்.

    சூடான விவாதம் 



    அத்துடன் தமிழக அரசின் தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி. ஆகையால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு- தமிழக அரசு கலைக்கப்படலாம் என்கிற தகவல் எஸ்.வி.சேகருக்கு கிடைத்திருக்கக் கூடும் அதனாலே அவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.வி.சேகரின் ட்விட்டரில் பக்கத்தில் சூடான விவாதங்கள் தொடருகின்றன

    S.VE.SHEKHER‏  @SVESHEKHER
     Dec 8  More
    விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். “பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது.”               2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad