Header Ads

  • சற்று முன்

    விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு;

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டிவனம் ரோஷணைப் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ராஜாராம் (46). கடலூர் போலீஸ் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிவரும் இவருக்கு சுமதி (40) என்ற மனைவியும் ரஞ்சித் (25) என்ற மகன் மற்றும் வித்யப்ரியா (24) என்ற மகளும் இருந்தனர். ராஜாராமுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.



    அவருக்கு மாற்று கல்லீரல் பொருத்துவதற்கு 60 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்று மருத்துமனை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.  அந்தத் தொகையைத் தயார்செய்ய முடியாததால் சுமதி, ரஞ்சித் மற்றும் வித்யப்ரியா மூவரும் மனம் உடைந்து சோகத்தில் இருந்திருக்கின்றனர். இந்தக் காரணத்தால், கடந்த சில நாள்களாகவே அக்கம்பக்கத்து வீட்டினரிடம்கூட பேசாமல் இருந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதல் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள், ரோஷணை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.



    அதையடுத்து அங்கு சென்ற போலீஸார், அந்த வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்தபோது, உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனால், கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சுமதி மற்றும் வித்யப்ரியா இருவரின் கை நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தனர்.
    வித்யப்ரியாவின் முகம் தீயில் கருகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு அருகிலேயே ரஞ்சித்தும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிடைத்த ரஞ்சித் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தில், “எங்கள் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்குரிய பணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் நாங்கள்  3 பேரும் தற்கொலை  செய்துகொள்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad