Header Ads

  • சற்று முன்

    ஆ.கே. இடைத் தேர்தலில் மீண்டும் பண புயல் ..... திமுகவினர் சாலை மறியல் .....

    ஆர்.கே.நகரில் போலீசார் பணப்பட்டுவாடாவை தடுக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை தண்டையார்பே-ட்டையில் பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு போலீசார் உதவுவதாகக் கூறி, தி.மு.க.வினர் அடுத்தடுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். நேதாஜி நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக 3 பேரைப் பிடித்த தி.மு.க.வினர், ஆர். கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்கள் அளித்தனர். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுப்பதாகக் கூறி, கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் காவல் நிலையம் முன்பு திமுகவினர் சாலைமறியல் ஈடுபட்டனர்.இதேபோல, மூப்பனார் வீதியில் ஒரு வீட்டில் பணம் இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து வாக்காளர்களுக்கு விநியோகமாவதாக தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர். உள்ளே சென்று சோதனையிட முயன்ற அவர்களை தடுத்த போலீசார், துணை ராணுவத்தினருடன் சேர்ந்து வீட்டை சோதனையிட்டனர். ஆனால், பணம் ஏதும் இல்லை என்று அவர்கள் கூறியதால், மீண்டும் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad