Header Ads

  • சற்று முன்

    ராம்கோ சிமெண்ட் லாரி பெயரில் மணல் கடத்தல்



    சேலம்: முறைகேடாகக் காவிரி ஆற்று மணலைக் கடத்திக்கொண்டு கர்நாடகாவுக்குச் செல்ல இருந்த மணல் லாரியைச் சேலம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் பிடித்து ஆர்.டி.ஓ, தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த மணல் லாரியைப் பிடித்துக்கொடுத்த சேலம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநகரத் தலைவரும் மாவட்ட பொருளாளருமான மதி என்கின்ற முருகேசனிடம் பேசினோம். ''இன்று காலை 8 மணிக்கு நாங்கள் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அந்த வழியாகச் சீரடி சாய் பாபா என்ற பெயரில் டி.என்.20 பி.ஹெச்.9459 என்ற நம்பர் பிளேட் லாரியில் முழுமையாகச் சரக்கு ஏற்றப்பட்டு தார்பாய் கட்டி ராம்கோ சிமென்ட் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
    லாரிக்கு அடியில் தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்துகொண்டே வந்தது. உடனே இது மணல் லாரி என்று கண்டுபிடித்துவிட்டோம். அந்த மணல் கர்நாடகாவுக்குச் செல்ல இருந்தது. உடனே சீலநாயக்கன்பட்டி பைபாஸ் டிராஃபிக் இருந்ததால் வண்டியை எங்க சங்க உறுப்பினர்கள் பிடிக்க முயன்றார்கள். வண்டி வேகமாகப் போய்விட்டதால் பின்னாடியே துரத்திப் போய் கொண்டலாம்பட்டி பைபாஸில் பிடித்து ஆர்.டி.ஓ., 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad