Header Ads

  • சற்று முன்

    வெற்றி வேலுக்கு விசாரனை கமிஷன் ஆறுமுகசாமி சம்மன்



    தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேலுவுக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோக்களை 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். ஜெயலலிதா உடல்நலம் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தது உள்ளிட்ட மேலும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் வெற்றிவேலுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad