• சற்று முன்

    கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கைது

                                                                                                  
     கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2013 -15 ஆண்டு கால கட்டத்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, சுமார் 1லட்சத்து 63 ஆயிரத்து 275 ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் பெருமாள் கொடுத்த புகாரின் பெயரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நட்டார், கிளார்க் கோவிந்தராஜ் மற்றும் சங்க தவைர் சின்னராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னராஜை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நட்டார் மற்றும் கோவிந்தராஜை தலைமறைவாகிவிட்டனர்  அவர்களை காவல் துறையினர்   தேடிவருகின்றனர்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad