Header Ads

  • சற்று முன்

    மணல் கொள்ளையர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரி ..... கொந்தளிக்கும் பகுதி மக்கள் .....

    விளாத்திகுளம் அருகேயுள்ள அம்மன்கோவில்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரிகள் செயல்பட்டன. 


    தற்போது அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மணல்குவாரிகள் நடைபெற்ற போது, எடுக்கப்பட்ட 100யூனிட்டுக்கும் மேற்பட்ட மணல் அம்மன் கோவில்பட்டியில் உள்ள தனியார் நிலத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பொதுப்பணித்துறை மூலமாக சில தனிநபர்களை மணலை எடுக்க வந்தாக கூறப்படுகிறது. விவசாய நிலத்திற்கு இடையே உள்ள அந்த மணலை எடுப்பதால் விவசாயம் , நீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நூதன முறையில் அருகேயுள்ள வைப்பாற்றில் மணலை அள்ளுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் உதவி செய்வதாக கூறி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மணல் அள்ளவந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணல் அள்ளவந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும் வருவாய்துறை மற்றும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad