Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - மேஷம்


  நல்லவை நாடி வரும் குதூகல ஆண்டாக இருக்கும். இவ்வளவு நாட்களாக பட்ட துன்பங்களும் கடன் தொந்தரவுகளும் முடிவுக்கு வரும். கண்டச்சனி, அட்டமச்சனி என அடுத்தடுத்து ஆறு வருடமாக பட்ட துயரங்கள் அனைத்தும் விலகி இப்போது உங்களுக்கு பாக்யச்சனி நடக்கிறது. தான் பிடித்த முயலுக்கு மூணு காலு என பேசிக்கொண்டே இருக்கும் நீங்கள் தனக்கு தெரிந்ததுதான் சரியென்று நம்புவீர்கள். அதனாலேயே பல இடத்தில் பல்பு வாங்ககியிருப்பீர்கள். ஆனால் மனதில் ஒன்றை வைத்துகொண்டு நாக்கால் இனிக்க இனிக்க பேசும் பழக்கம் உங்ககளிடம் இருக்காது. உள்ளதை உள்ளபடி பேசுவதால் சிறந்த தலைமைப்பண்பு உடையவர்களாக இருப்பீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் மனம் மாறிப் போனாலும் அதற்காக வருந்தாமல் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இளகிய மனம் படைத்த உங்களை பலர் எல்லாவற்றிக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். வீழ்ந்து கிடக்கும் குடும்பத்தை தூக்கி நிறுத்தும் வலிமையோடு செயல்படுவதால் எப்போதும் ஒருவிதமான பதட்டத்தோடே இதுவரை இருந்திருப்பீர்கள். உங்களின் நளினமான மனநிலை கண்டு காதல் வயப்படுபவர்கள் ஏராளம் பேர் இருப்பார்கள்.
  உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குரு அமர்ந்துள்ளதால் கணவன் மனைவியிடையே உறவுச் சிக்கல்கள் தோன்றி மறையும் வாய்ப்புண்டு. எனவே இருவரும் விட்டுக் கொடுத்துப் போனால் குடும்பத்தினர் அனைவருக்கும் நிம்மதி இருக்கும். விவாகரத்து விஷயமாக கோர்ட்களுக்கு சென்று திரும்பும் தம்பதியர்கள் பிப்ரவரிக்கு பிறகு மனநிம்மதி பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். சொந்த ஊரை விட்டு வெளியிடங்களில் தொழில் செய்கிறவர்கள் மகத்தான வளர்ச்சியைப் பெறுவார்கள். விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருக்கும் அரசுப் பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளோடு வெளியிடங்களில் ஐக்கியமாவார்கள்.
  ராசிக்கு நான்கில் ராகுவும் பத்தில் கேதுவும் உலாவுவது சாதகமானதல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் பாதிப்புகள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. தொழில்அதிபர்கள் தங்கள் பணியாளர்களுக்கு தேவையானவற்றை அறிந்து உதவிடுவதால் மன உளைச்சல்கள் வராமல் தடுக்கும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கைச்சுத்தத்தோடு நடந்து வருமானங்களை பெருக்க முடியும். மொத்தக்கடைகளில் பணிபுரியும் பெண்களின் குடும்ப பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதுமணத் தம்பதிகள் தங்கள் உறவை எப்போதும் புதிதாக வைத்துக் கொள்ள ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பத்திரிக்கையாளர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளும் விதமான சம்பவங்கள் நடந்து அனுபவ அறிவைப் பெறுவார்கள். ஆன்மிக ஸ்தலங்களில் பணிபுரிபவர்களுக்கு ஞானம் மேலொங்கும். அரசு அலுவகங்களில் பணிபுரிவோர் எதிபார்க்கும் பதவி உயர்வுகளை இட மாறுதலோடு அடைவார்கள். அரசு மருத்துவமனை செவிலியராக இப்போது வேலைக்கு சேர்ந்துள்ளவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெறுவார்கள். சத்துணவு அமைப்பாளராக இருந்து டிபார்ட்மெண்ட் தேர்வெழுதி ஜெயித்து செவிலியராக பயிற்சி பெறும் பெண்கள் வாழ்வில் தன்னம்பிக்கை அடைவார்கள். வீட்டு வேலைபார்க்கும் பெண்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறும் விதமான உதவிகளைப் பெறுவார்கள். மதிப்பிற்குரிய திருநங்கைகள் வாழ்வில் திருப்பங்கள் நிகழும். அரசியல் செய்திகளை பதிவிடும் பத்திரிகையாளர்களுக்கு அனைத்து ஊடங்களிலும் மதிப்பு உயரும். சினிமாவின் அரிச்சுவடி தெரியாதவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

  தொடர்புக்கு : 9965405351


  கருத்துகள் இல்லை