Header Ads

  • சற்று முன்

    ஒக்கி புயல் நிவாரணப் பணிக்கு ரூ.747 கோடி, சீரமைப்புப் பணிக்கு ரூ.5,225 கோடி வழங்க பிரதமரிடம் கோரிக்கை




    ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும், புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு 5 ஆயிரத்து 255 கோடி ரூபாய் நிதி வழங்கவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்தனர். பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். ஒக்கி புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு 5 ஆயிரத்து 255 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
    தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்தியக்குழு அனுப்பப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்ததாக முதலமைச்சர் கூறினார். கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடும் பணியை தொடர வேண்டும் என பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிடுமாறு, பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad