Header Ads

  • சற்று முன்

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் நேரில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

    கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணிநேரம் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
    முதல் கட்டமாக லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர், அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் . 


    பின்னர், திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி, கன்னியாகுமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு விருந்தினர் மாளிகையில், முதலமைச்சருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.



    பின்னர் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி குறைகளைக் கேட்டறிந்தார். அங்கு கூடியிருந்த 31 பிரதிநிதிகளிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் விவரங்களைக் கேட்டறிந்தார். மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடியை கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மீனவர்களை பிரதமர் மோடி சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad