குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

2ஜீ வழக்கு தீர்ப்பினால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்பட பேவது இல்லை – டி.டி.வி.தினகரன் பேட்டி



ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு அவரது வீட்டிற்கு ஆறுதல் கூறுவதற்காக அதிமுக(அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செல்லும் வழியில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் இருந்து கட்சியின் பொதுச்செயலாளருக்கு சம்மன் அனுப்பியது குறித்து எதுவும் தெரியாது என்றார். தமிழகத்தில் ஆளுநர் செயல்பாடு தவறானது என்றும், 2ஜீ வழக்கு தீர்ப்பினால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றம் நிகழப்போவது கிடையாது என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சிலர் கூறி வருகின்றனர். அது பொய்யான செய்தி, ஊடகங்கள் தான் அதனை பெரிது படுத்தி வருவதாகவும், ஜெயலலிதாவின் மகள் குறித்து பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என்பது வேடிக்கையான செய்து, அவருக்கு ஜெயலலிதாவை 2001ல் தான் தெரியும்,


87ல் வெண்ணிறைடை நிர்மலாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர் பன்னீர்செல்வம், தமிழக காவல்துறையினரும், உளவுத்துறையினரும்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை கண்காணிப்பது மட்டுமே வேலையாக வைத்திருந்தனர். ராஜஸ்தானுக்கு ஒரு திருட்டு கும்பலை பிடிக்க போக வெறும் 4காவலர்களை அனுப்பியது தவறு, அதிகளவு காவலர்களை அனுப்பி இருக்க வேண்டும் என்று பெரியபாண்டியன் மனைவி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வீட்டில் இழவு விழுந்தாலும் பரவ இல்லை, அவருக்கு வேண்டியது கிடைத்து போது என்று நினைக்கிறார் என்று தெரிவித்தார். பேட்டியில் 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கதமிழ்செல்வன், சுந்தர்ராஜ், உமாமகேஸ்வரி, அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா, ஒன்றிய செயலாளர்கள் ரூபம்.கே.வேலன், ஈஸ்வரபாண்டியன், செல்வக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.சிவபெருமாள், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நாகராஜன், பி.வி.சீனிவாசன், செண்பகராமன், எல்.எஸ்.பாபு, கணபதிபாண்டியன், ராஜேஸ்கண்ணன், பெரியசாமிபாண்டியன், வெள்ளத்துரை, சின்னத்துரை, கருப்பசாமி, செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.