Header Ads

  • சற்று முன்

    2ஜி அலைக்கற்றை வழக்கு: டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என டெல்லி சிபிஐ சிறப்புநீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
    இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.இதை தொடர்ந்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இருந்ததால் அவற்றைப் படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பை எழுதும் பணியில் ஈடுபடுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சைனி, 2ஜி வழக்கின் தீர்ப்பு, டிசம்பர் 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.டிசம்பர் 21ஆம் தேதியன்று, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.


    வழக்கு குறித்த தகவல்கள்
    மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad