• சற்று முன்

    கடல் வாழ்வை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஐநா எச்சரிக்கை

    அதிகளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ்வு சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல்களுக்கான பிரிவின் தலைவர் எச்சரித்துள்ளார்.


    அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்த விரைவாக செயல்பட வேண்டும் என்று லிசா ஸ்வென்சன் கூறுயுள்ளார்.

    "இது புவிக் கோளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி" என்றும் "பிளாஸ்டிக்கை வசதிக்காக கண்டுபிடித்த சில தசாப்தங்களிலேயே அதன் மூலம் கடலின் சுற்றுச் சூழலை நாம் அழித்து வருகிறோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
    நைரோபியில் நடக்கவுள்ள ஐ.நா சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
    கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பிளாஸ்டிக் குப்பைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
    பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் பாதிக்கப்படும் ஆமைகளை பராமரிக்கும் ஒரு கென்ய மருத்துவமனை பற்றிய செய்தியை கேட்டு அவர் வேதனை அடைந்தார்.


    கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்தபோது மீனவர் ஒருவரால் மீட்கப்பட்ட 'கய்' என்ற இளம் ஆமையை அவர் பார்வையிட்டார்.
    ஆமைகள் அதிகமாக பிளாஸ்டிக் சாப்பிட்டிருந்தால், அவைகளின் வயிறு வீக்கமடைந்து, மிதப்பதிலிருந்து கட்டுப்படுத்த முடியாது என்பதால் அந்த ஆமை பிளாஸ்டிக் கழிவுகளைதான் உட்கொண்டிருக்க வேண்டுமென்று உடனடியாக சந்தேகிக்கப்பட்டது.
    ஆமையின் உடற்கூறுகளை தூய்மைப்படுத்துவதற்காக அதற்கு இரண்டு வாரகாலத்திற்கு மலமிளக்கிகள் கொடுக்கப்பட்டு, கய் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டபோது லிசா ஸ்வென்சன் ஒரு உணர்ச்சிகர தருணத்தை கண்டார்.
    'வேகத்தை பெறுகிறதா?'
    பிளாஸ்டிக்கால் ஏற்பட்டுள்ள "சவாலின் அளவு முற்றிலும் மகத்தானது" என்று கூறும் ஸ்வென்சன், கடல்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க வலியுறுத்தி நார்வே இயற்றியுள்ள ஒரு தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    அனைத்து நாடுகளும் அந்த நீண்டகால இலக்குடன் உடன்பட்டால் அது ஒரு ஐ.நாவின் வெற்றியாக கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
    2025 ஆம் ஆண்டுக்குள் கடல் மீதுள்ள கழிவுப்பொருட்களை கணிசமாகக் குறைப்பதற்கான தற்போதைய உறுதிப்பாட்டை விட இது மிகவும் அதிகளவு லட்சிய நோக்கமுள்ளதாக உள்ளது.
    கழிவுகளைத் தடுக்க ஒரு கால அட்டவணை இல்லாதது பெரும் தோல்விக்கு வித்திடுவதாக சில சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
    படத்தின் காப்
    கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த டிஷா பிரௌன் பிபிசிக்கு அளித்த பேட்டியில் "வலுவான உடன்படிக்கைக்காக அவர்கள் செயல்படுவதை வரவேற்கிறோம். ஆனால் பில்லியன் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்குள் நுழைவதை தடுக்க அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது."
    "உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான பொறுப்பை வேண்டும். நம்மை இந்நிலைக்கு இட்டுச்சென்றுள்ள நமது நுகர்வு முறைகளை சரிபார்க்க வேண்டும்."
    சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடான இந்தோனேசியா 2025-ல் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 75% குறைக்க உறுதியளித்துள்ளது. ஆனால், இதைச் செய்ய சட்ட விதிகள் போதுமானதாக இருக்கிறதா என்று சில பார்வையாளர்கள் சந்தேகிக்கின்றனர்."
    அதிகளவிலான மீன்பிடிப்பு மற்றும் இரசாயன மாசுபாடு, கழிவுநீர் மற்றும் வேளாண்மை; கடலோர பகுதிகளில் வளர்ச்சி; பருவநிலை மாற்றம்; கடல் அமிலம் மற்றும் அதிக சுரண்டலுக்குள்ளாகும் பவளப் பாறைகள் போன்ற பன்முனை தாக்குதல்களை கடல் எதிர்கொள்வதாக ஸ்வென்சன் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad