Header Ads

  • சற்று முன்

    18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கு டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
    அப்போது, சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 18 பேரை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூற முடியாது என்று வாதிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களும் எந்த நோக்கத்தில் இருந்தார்கள் என்றும், அவர்களை இயக்கியது யார் என்பதையும் ஆராய்ந்தே சபாநாயகர் நடவடிக்கை எடுத்ததாக வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad