தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் ஆர்பாட்டம்
ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பை மாதம் தோறும் வழங்க வேண்டும், அரசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்யக் கூடாது, ரேசன் கடைகளை மூட மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஜெயகுமார் ரூபன், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், செந்தில்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல், சண்முகபுரம் மெயின் ரோட்டில் உள்ள ரேசன் கடை முன்பு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் கவுன்சிலர் குபேரன், திமுக நிர்வாகிகள் ஜெயசிங், ராஜா, பொன்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது போல் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தாலூகாக்களில் உள்ள ரேசன் கடைகள் முன்பும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போராட்டம் நடந்தது.
கருத்துகள் இல்லை