ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பை மாதம் தோறும் வழங்க வேண்டும், அரசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்யக் கூடாது, ரேசன் கடைகளை மூட மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தி எட்டயபுரம் நகர திமுக சார்பில் அமுதம் ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் திமுக நகர செயலாளர் ஆ.பாரதிகணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட பிரதிநிதி பரமசிவன், ஒன்றிய பிரதிநிதிகள் ராமர், முகமதுராஜ், கற்பகராஜ் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் குமார், துணை அமைப்பாளர் காளை கிருஷ்ணவேல், நகர திமுக துணைச்செயலாளர் மாரிமுத்து, நகர நெசவாளர் அணி அமைப்பாளர் பிச்சை, வர்த்தாக அணி நகர துணை அமைப்பாளர் போடி சங்கர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செய்யதுமுகமது. வார்டு செயலாளர்கள் பட்சிராஜன் தேவகிருபை, வார்டு முன்னாள் செயலாளாகள், மாரியப்பன், முனியசாமி, 1வது வார்டு இளைஞர் அணி லெனின், அலெக்சாண்டர் மற்றும் மதர்சா காளியப்பன் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளசை லெனின்
கருத்துகள் இல்லை