திரிபுரா சிட்பண்டு நிறுவனம் மோசடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை மோசம் செய்ததாக திரிபுரா சிட்பண்டு நிதி நிறுவனம் மீது பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த திரிபுரா சிட்பண்டு நிதி நிறுவனம் காரைக்குடியில் கிளை நிறுவனமாக செயல்பட்டுவந்தது . இந்த நிதி நிறுவனத்தை நம்பி பல திட்டங்கள் கீழ் மாதமாதம்ஆயிரகணக்கானோர் பணம் கட்டி வந்தனர். சீட்டின் முடிவில் பணம் தராமல் இழுத்தடித்தை தொடர்ந்து பொது மக்கள் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
கருத்துகள் இல்லை