Header Ads

  • சற்று முன்

    பெங்களூர் சிறைசாலையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் கூடிய விரைவில் வருமான வரி சோதனை

    வருமான வரித்துறையிடம் சிக்கியவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இளவரசியிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2,000 அதிகாரிகள், 190 இடங்கள், 355 நபர்கள்.. இப்படித்தான் சசிகலா குடும்பத்தை குறிவைத்து இமாலய ரெய்டு நடந்தது. இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய வருமான வரி சோதனை இது.


    திவாகரனும் வருகிறார் 


    இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா, ஜெயா டிவி மேலாளர் நடராஜன், கொடநாடு மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் டாக்டர் சிவகுமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா தம்பி திவாகரனும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.


    சசி, இளவரசியிடம் விசாரணை
    இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன. இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனராம் வருமான வரித்துறையினர்.



    விரைவில் பெங்களூரு சிறையில்... இது தொடர்பான அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டனவாம். ஓரிரு வாரங்களில் பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என கூறப்படுகிறது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad