Header Ads

  • சற்று முன்



    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை கால்வாயில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் உள்ள கட்டளை கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட கோரி பொது பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரி வந்தனர். 
    ஆனால் இது வரை திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி, சேலம், கோவை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன. இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரி மேலூர் விவசாயிகள் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad