Header Ads

  • சற்று முன்

    குழாய் பதிக்காமலேயே குடிநீர் எப்படி வழங்க முடியும்? மாநகராட்சி அறிவிப்புக்கு கீதாஜீவன் கண்டனம்




    தூத்துக்குடியில் 4வது பைப் லைன் திட்ட பணிகள் நிறைவு பெறாமல் வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்து இருப்பதற்கு கீதாஜீவன்  எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன்  எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:  தூத்துக்குடி  மாநகராட்சியில் 4வது பைப்லைன் திட்டப் பணிகள் தொடங்கி 7 ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இது தொடர்பாக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், ஆமை வேகத்தில் நடந்த பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளது. இருந்து பணிகள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. 

    ஆனால், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு பணம் கட்டியவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள வார்டுகளில் இதுவரை தெருக்களில் பதிக்கவேண்டிய கறுப்பு குழாயோ, அல்லது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய ஊதா குழாயோ பதிக்கப்படவில்லை. அதுபோல் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டு தீர்வையில்லாமல் குடியிருந்து வருகிறார்கள். 4வது பைப்லைன் திட்டத்திற்காக பணம் கட்டி பலர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். 

    பைப்லைன் பதிக்கும் பணிகள் நிறைவு பெறாமலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு 22ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் தமிழக முதல்வரை திருப்தி படுத்துவற்காக வெளியிட்ட அறிவிப்பாகவே தெரிகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், 4வது  பைப்லைன்  திட்டப்பணிகளில் பைப்லைன்களை பதித்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மீளவிட்டான், அத்திமரப்பட்டி, உள்ளிட்ட ரூரல்   பகுதிகளுக்கும், இதன் பின்பு மாநகர பகுதிகளிலுள்ள மக்களுக்கும்   வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
                                                                                                             இளசை லெனின்













    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad