கோவில்பட்டி பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் கோவில்பட்டி ரெயில்வே நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை ஆசிரியை குமுதம் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்க துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை மாணவர்கள் 37 பேர் கோவில்பட்டி ரெயில்வே நிலைய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற மரக்கன்றுகளில் உள்ள களச்செடிகளை அப்புறப்படுத்தியும் மரக்கன்றுகளுக்கு பாத்திகள் கட்டியும், தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாடார்நடுநிலைப்பள்ளி பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உறுப்பினர் மணிக்கொடி, உடற்கல்வி ஆசிரியர் தாமோதரன். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், உள்ளிட்ட தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய பசுமைப்படை கூடுதல் ஒருங்கினைப்பாளர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்.
இளசை லெனின்
கருத்துகள் இல்லை