காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கண்டித்து ஆர்பாட்டம்:
தாம்பரம் அடுத்த பல்லாவரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. பணமதிப்பு இழுப்பு நடந்து ஒராண்டு முடிந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு தின ஆர்பாட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் பல்லாவரம் நகர பொறுப்பாளர் தீனதயாளன் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் பொருப்பாளர்கள் நெடுஞ்செழியன்,கேசவபெருமாள், தாமோதரன், ஐயப்பன், சிக்கந்தர், ராஜிவ் தாம்பரம் நகர தலைவர் விஜய் ஆனந்த நவ்வை மணியன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.வி.தங்கபாலு கூறுகையில் இந்திய நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் பிஜேபி தவிர்த்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்து இந்த கருப்பு தின நிகழ்வை நடித்திகொண்டிருக்கிறோம். போன வருடம் நவம்பர் 8 ந்தேதி பாரத பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்தார். இந்த பணமதிப்பிழப்பு காரணமாக இந்திய நாடு அடைந்த துயரங்களை தெரிவிக்கத்தான் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்டாரங்கள் ஆகிய இடங்களில் இந்த கருப்பு தின ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.தவறான பண மதிப்பிழப்பு காரணமாக ஜி எஸ் டி வரிப்பிதிப்பு காரணமாக மக்கள் படும் துயரங்களை கண்டு இந்த ஆற்பாட்டம் நடத்துகிறோம்.இந்த நாடு பொருளாதாரம் சீரழ்ந்து விட்டது.சிறு குறு தொழில்கள், விவசாயம், நெசவு தொழில், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கள் பறிபோய்விட்டது. இந்த அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்த காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். அன்னை சோனியகாந்தி வழிகாட்டுதலில் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது இந்த துயரங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும். அதுவரை இந்த மாதிரி போரட்டங்கள் ஜனநாயக ரீதியில் காங்கிரஸ் கட்சி வழி நடத்தும் இவ்வாறு அவர் கூறினார்.
பிரபாகரன்
கருத்துகள் இல்லை