தொடரும் வருமான வரி சோதனை அச்சத்தில் வி.ஐ.பிகள்

மன்னார்குடி: திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலும் வீட்டிலும் காலையில் இருந்து நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை முடிவடைந்தது. இந்த நிலையில் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சுத்தரக்கோட்டையில் இருக்கும் அந்த புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் இன்னும் சோதனை நடைபெறது. அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் அன்பு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அந்த கல்லூரி உரிமையாளர் திவாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். திவாகரனுக்கு தனது கல்லூரியில் ரெய்ட் நடக்கும் விஷயம் தெரியும் முன்பே அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது . 7 மணிக்கு முன்பு தொடங்கிய இந்த சோதனை தற்போதுதான் முடிவடைந்தது. மன்னார்குடி வந்த சோதனை அதிகாரிகளில் பாதி பேர் அங்குதான் இருந்தனர். இந்த நிலையில் நாளையும் திவாகரன் வீட்டில் சோதனை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை திவாகரன் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டு இருக்கிறதா என்பது கூறப்படவில்லை. நாளை காலை 6 மணிக்கே மீண்டும் சோதனை தொடங்கும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை