கோவில்பட்டி அருகே தனியார் பேருந்து டூவிலர் மீது மோதி விபத்து – கட்டிட தொழிலாளி பலி
கோவில்பட்டி சுப்பிரமணியாபுரம் 3வது தெருவைச்சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் ஜெயபால். கட்டிட தொழிலாளியான இவர் எட்டயபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு தனது டூவிலரில் சென்று விட்டு கோவில்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது கருங்காலிப்பட்டி அருகே வந்த போது விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்து ஜெயபால் டூவிலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளசை லெனின்
கருத்துகள் இல்லை